தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித துறை பேராசிரியராக பணியாற்றிவரும் சிவசங்கரன், அந்த கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவரும் ராமர் என்ற மாணவரும் அதே வகுப்பை சேர்ந்த மாணவியும் காதலித்து வந்ததை கண்ணடித்துள்ளார்.
மேலும் அது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடத்திலும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ராமர், அவரது நண்பர்கள் மூவரின் உதவியுடன் பேராசிரியர் சிவசங்கரன் அலுவலகத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மயக்கமடைந்த சிவசங்கரனை பிற பேராசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களும், ஆசிரியர் சிவசங்கரனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கரன், மாணவர்கள் தன்னை தாக்கியபோது பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் அழித்துவிட்டனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…