Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cauvery River : காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு..?

Muthu Kumar May 20, 2022 & 11:46 [IST]
Cauvery River : காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு..?Representative Image.

Cauvery River : வரலாற்றில் முதன் முறையாக கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோடை மழை

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோடை மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து உயரத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 5000 கன அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 7500 கன அடியாக உயர்ந்தது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவி, மற்றும் பரிசல் பயணம், ஆற்றில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று கோடை மழை குறைந்ததால் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

கோடை காலத்தில் வெள்ளப் பெருக்கு  

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைமேடை, அருவிகள் மற்றும் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவது நேற்று தான் இது வரலாற்றில் முதல் முறை ஆகும். 

கண்காணிப்பு பணி

இந்நிலையில், காவிரி ஆற்றில் ஊட்டமலை, ஆலம்பாடி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்