Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Crime : மான் வேட்டையில் திடீர் துப்பாக்கிச்சூடு..? 3 போலீசார் பலி..!

Muthu Kumar May 14, 2022 & 17:45 [IST]
Crime : மான் வேட்டையில் திடீர் துப்பாக்கிச்சூடு..?  3 போலீசார் பலி..!     Representative Image.

Crime : மத்தியப் பிரதேச மாநில வனப்பகுதியில் மான் வேட்டையாடுபவர்களை தடுக்கச் சென்ற போலீசார் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் பலி

மான் வேட்டை

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குணா மாவட்டத்தில் உள்ள அரோன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பிளாக் பக்ஸ் எனப்படும் அரிய வகை மான்களை வேட்டையாடப் படுப்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வனபகுதிக்கு போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.

துப்பாக்கிச்சூடு 

இந்த சோதனையில், பல மான்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. மேலும் மான்களை வேட்டையாளர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடிக்க முயன்றனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வேட்டைக்காரர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர்.

காவலர் பலி

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ், தலைமை காவலர் சாந்த் குமார் மினா மற்றும் காவலர் நீரஜ் பார்கவ் ஆகியோர் குண்டடி பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காவல்ர்களின் வாகன ஓட்டுநரும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் நவ்ஷாத் மேவதி என்ற வேட்டைக்கார நபரும் கொல்லப்பட்டார்.

தப்பி ஓடிய வேட்டைக்காரர்கள் 
 
துப்பாக்கிச்சூடு நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததால் வேட்டைக்காரர்கள் தப்பி ஓடினார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்