Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூகுள் மேப் அட்ராசிட்டி....வயலுக்குள் இறங்கிய கார்...கயிறு கட்டி இழுத்த சம்பவம்..!

madhankumar July 14, 2022 & 13:04 [IST]
கூகுள் மேப் அட்ராசிட்டி....வயலுக்குள் இறங்கிய கார்...கயிறு கட்டி இழுத்த சம்பவம்..!Representative Image.

கேரள மாநிலம் மைலாப்பூரில் உள்ள திரூரை சேர்ந்த குடும்பத்தினர் பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலசித்ரா மலைபாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என கூகுள் மேப் காட்டியுள்ளது.

இதையடுத்து, அப்பகுதி வழியே செல்ல முடிவு செய்து, காரை இயக்கியுள்ளனர். ஆனால் கூகுள் மேப் பாலச்சிராவுக்கு செங்குத்தான பாதை வழியாக சென்றது.  திடீரென சாலை முடித்து அங்கு நெல் வயல் இருந்துள்ளது, வயல் முழுவது நீர் நிறைந்து நிறுத்தத்தால் கார் மாட்டிக்கொண்டது. இதனால் இரவு முழுவதும் காரை எடுக்காமல் காரை அங்கேயே விட்டுவிட்டு சாலைக்கு நடந்து சென்று வேறு வாகனத்தின் மூலம் பயணத்தை அந்தக் குடும்பத்தினர் தொடங்கினர். மறுநாள் காலை, உள்ளூர் மக்கள் காரை கயிறுகட்டி சிரமப்பட்டு இழுத்து காரை சாலைக்கு கொண்டு வந்தனர். 

இதேபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் கேரளாவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குறப்பந்தரா-கல்லாரா சாலையில் உள்ள குறப்பந்தரா கடவு பள்ளத்தில் கார் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் இது போல் கூகுள் மேப்பை நம்பி பல கிலோமீட்டர் தவறான பாதையில் சென்று பின்னர் தான் தங்கள் தவறான பாதையில் செல்கிறோம் என்பதை உணர்கின்றனர். இதனால் பல சுவாரசிய சம்பவங்களும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நிகழ்ந்துவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்