Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

20 ஆண்டுகளுக்கு பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட தாலிபன் தலைவரின் கார்...!

madhankumar July 08, 2022 & 13:01 [IST]
20 ஆண்டுகளுக்கு பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட தாலிபன் தலைவரின் கார்...!Representative Image.

தாலிபான்கள் மீது அமெரிக்க போர்தொடுத்த 2001 ஆம் ஆண்டு தலிபான் தலைவர் முல்லா ஒமர் வெள்ளை நிற டொயாட்டோ காரில் ஏறி தப்பிக்க முயன்றார்.

தெற்கு ஆகிய நாடான ஆப்கானிஸ்தானில் முல்லா ஒமர் என்பவர் தாலிபான் அமைப்பை தோற்றுவித்தார். அதனையடுத்து அந்த நாடு யாருக்கு எதிராக போர் நடத்தி 1996 ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினார். அதன் பின்னர் அல்-கொய்த தீவிரவாதிகள் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கியதை அடுத்து அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த தாலிபான்கள் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு போர் தொடுத்து அவர்களின் ஆட்சியை களைத்து மீண்டு மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியை அமைத்தது.

அந்த போரின்போது அங்கிருந்து தப்பித்து சென்ற முல்லா ஒமர் 2013 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவர் தப்பித்து செல்லும்போது வெள்ளை நிற டொயாட்டோ குவாலிஸ் காரில் சென்றார், ஆனால் அமெரிக்க ராணுவம் வான்வெளி தாக்குதல் தொடர்ந்து நடத்தியதால் அவரால் தப்பித்து செல்ல முடியவில்லை, அதனால் காரை குழுவினரிடம் ஒப்படைத்துவிட்டு வேறு வழியாக தப்பி சென்றார்.

அந்த காரை தலிபான் படையைச் சேர்ந்த அப்துல் ஜபார் ஒமாரி என்பவர், ஸாபூல் மாகாணத்தில் உள்ள தன் தோட்டத்தில், பூமிக்கு அடியில் மண்ணில் புதைத்து வைத்தார். தற்போது, அந்தக் காரை அவர் பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் வெளியே எடுத்துள்ளார்.

அந்தக் கார் அதிக சேதமின்றி அப்படியே இருப்பதாகவும், அதை ஆப்கனின் தேசிய அருங்காட்சியகத்தில், மக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்