Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 மாவட்ட மக்களே உஷார்... அடித்து தூக்குது கனமழை..!

UDHAYA KUMAR October 06, 2022 & 09:26 [IST]
10 மாவட்ட மக்களே உஷார்... அடித்து தூக்குது கனமழை..!Representative Image.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. 

அடுத்த நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என 10 மாவட்டங்களை கணித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். அதில் இன்று சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 

06.10.2022 அக்டோபர் 6ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள் பட்டியலில், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி,  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்