Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடல் சாகச விளையாட்டு....தமிழக மாணவர்கள் அசத்தல்..!

muthukumar July 01, 2022 & 13:35 [IST]
கடல் சாகச விளையாட்டு....தமிழக மாணவர்கள் அசத்தல்..!Representative Image.

தூத்துக்குடி கடலில் நடத்தப்பட்ட கிட்டேபோர்டிங் கடல் சாகச விளையாட்டுப் போட்டியில் மும்பை, கோவா, தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி வீரர்கள் வெற்றி பெற்று பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

2024ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கடல் சாகச விளையாட்டு போட்டியான கிட்டேபோர்டிங் சேர்க்கப்படவுள்ளது. எனவே இந்த விளையாட்டை இந்திய அளவில் பிரபலப்படுத்துவதற்காகவும் இந்திய இளைஞர்கள் மத்தியில் கிட்டேபோர்ங் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாவட்டத்தில் அதிகமாக காற்று வீசக்கூடிய கடல்பகுதியான வேப்பலோடை கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டது.

இந்த போட்டியில் கர்நாடகா, கோவா, மும்பை, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர். இந்த கிட்டேபோர்டிங் விளையாட்டு என்பது, கடற்கரையில் இருந்து குறிப்பிட்ட தூரம் காற்றோட்டத்திற்கு ஏற்றபடி பாராசூட் போன்ற காத்தாடியை செலுத்தி கடலில் இலக்கை நோக்கி பயணிப்பதாகும். மொத்தம் 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 12 போட்டிகள் நடைபெற்றது. இறுதியில் கிரேட் அடிப்படையில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாநிலங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை மும்பயை சேர்ந்த டைலனும்,  2வது இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த அர்ஜூன் மோத்தா என்ற வீரரும் தட்டிச்சென்றனர். பெண்கள் பிரிவில் முதல் இடத்தை கோவாவை சேர்ந்த காட்டியாஷைனி என் வீராங்கனையும், 2வது இடத்தை கோவாவை சேர்ந்த கெனோ ராஜாநி என்ற வீராங்கனையும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்கள் 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்