Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொடூரம்.. ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை..

Nandhinipriya Ganeshan September 13, 2022 & 13:00 [IST]
கொடூரம்.. ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை..Representative Image.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமண்குடி கிராமத்த சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது 30). பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.  கொரோனா காலத்தில் வேலையை இழந்த முத்துகுமரன் காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போனது. இதனால் மகன்களின் படிப்பிற்கு செலவு செய்யமுடியாமல் திணற நேரிட்டது. இதனையடுத்து வெளிநாடு சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று நினைத்து, வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் குவைத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக முத்துகுமரன் ஒருவரிடம் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், கடந்த 3 ஆம் தேதி குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தொலைபேசியில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, எனக்கு இங்கு வேலை பிடிக்கவில்லை என்றும், மீண்டும் ஊருக்கே வந்துவிடுகிறேன் என்றும் மனைவியுடன் கூறியுள்ளார். இந்த நிலையில், 7 ஆம் தேதி முதல் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டதால், கணவரிடம் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளார் மனைவி வித்யா. இதற்கிடையில், கடந்த 9 ஆம் தேதி முத்துகுமரன் குவைத்தில் இறந்துவிட்டதாக ஒரு பெரிய குண்டு வித்யாவின் செவிகளுக்கு ஒலித்தது. 

அதிர்ந்த போன குடும்பத்தினர் உடனே ஐதராபாத் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனாலும், அங்கு சரியான பதில் கிடைக்காததால் அரசு தரப்பு மூலம் முயற்சி செய்து பார்த்துள்ளனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. நிலைகுழைந்த போன குடும்பம் என்ன செய்வதென்று அரியாமல் திகைத்து நின்றுள்ளது. பெரிய நிறுவனம் ஒன்றில் குமாஸ்தா வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று, அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பணக்காரர் ஒட்டகம் மேய்ப்பது தான் வேலை. 

ஆனால், ஒட்டகம் மேய்ப்பதற்கு முத்துகுமரன் மறுத்துவிட்டதால், இவருக்கும் அவரது முதலாளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார் முத்துகுமரன். முத்துகுமரனின் செயலால் மேலும் ஆத்திரமடைந்த முதலாளி முத்துகுமரனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் அவரை சுட்டுக்கொலை செய்துள்ளார். இச்செய்தி ஐமன் மேட் நியூஸ் என்ற பத்திரிகையில் செய்தி வெளியாக, நிலைகுழைந்து போன குடும்பத்திற்கு அங்கு சுட்டுக்கொல்லப்பட்டது முத்துகுமரன் என்று தெரியவருகிறது. 

இதனடைப்படியில், மனைவி வித்யா திருவாரூர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய கலெக்டர் அந்த மனுவை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்