Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி தமிழ் தெரியாமல் அரசுப் பணி கிடையாது.. மசோதா நிறைவேறியது!!

Sekar Updated:
இனி தமிழ் தெரியாமல் அரசுப் பணி கிடையாது.. மசோதா நிறைவேறியது!!Representative Image.

தமிழகத்தில் அரசுப்பணிகளில் சேர்வதற்கு தமிழில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வாகும் தேர்வர்களுக்கு தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என கடந்த 2021இல் அரசாணை வெளியிடப்பட்டியிருந்தது.

இந்நிலையில், தற்போது அரசாணைக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து இனி தமிழக அரசுப்பணிகளில் சேர, தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகிறது.

முன்னதாக தமிழ் தெரியாதவர்களாக இருந்தால், பணியில் சேர்ந்த நாளிலிருந்து 2 ஆண்டுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என இருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்