Thu ,May 02, 2024

சென்செக்ஸ் 74,482.78
-188.50sensex(-0.25%)
நிஃப்டி22,604.85
-38.55sensex(-0.17%)
USD
81.57
Exclusive

இந்திக்கு வக்காலத்து வாங்கிய தமிழிசை செளந்தரராஜன்; கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி! 

KANIMOZHI Updated:
இந்திக்கு வக்காலத்து வாங்கிய தமிழிசை செளந்தரராஜன்; கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி! Representative Image.

கம்பன் வடமொழியை கற்காவிட்டால் கம்ப ராமாயணம் நமக்கு கிடைத்திருக்குமா? என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 


திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், வடக்கும் - தெற்க்கும் இணைந்து செயல்பட்டால் நாடு சுபிட்சம் அடையும். கம்பன் வடமொழியை கற்காவிட்டால் கம்ப ராமாயணம் நமக்கு கிடைத்திருக்காது. எனவே இன்னொரு மொழி கற்பதை யாரும் தடுக்க வேண்டாம் என பேசியுள்ளார். 


தியாகராஜரின் 176 ஆராதனை விழாவினை குத்துவிளக்கு ஏற்றி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்து மதத்தில் உள்ளது எல்லாம் அனைவரும் அறிந்ததா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அப்பருக்கு கைலாயத்தில் இருந்து கொண்டே சிவன் காட்சி கொடுத்துள்ளார். இன்று நாம் அனைத்தையும் காணொளி மூலம் காண்கிறோம். ஆனால் அன்றே சிவன் அந்த டெக்னாலஜியை பயன்படுத்தி அப்பருக்கு காட்சி கொடுத்துள்ளார்.

 

எனவே அனைத்தும் நம்பிக்கை மட்டுமல்ல, அதிகாரபூர்வமாக ஆதாரத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாம் எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். மற்ற மதத்தில் உள்ள நல்லதுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும்

 

தமிழிசை தெலுங்கும் பேசலாம், தெலுங்கு பேசும் நண்பர்கள் தமிழும் பேசலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை தான் தமிழகத்தில் இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். வடக்கும் - தெற்க்கும் இணைந்து செயல்பட்டால் தான் நாடு சுபிட்சமாக இருக்கும் என்று அன்றே சொல்லி வைத்தார்கள். தமிழ் நமக்கு உயிர் தான். ஆனால் மற்ற மொழிகளையும் நாம் கற்க வேண்டும். அதனை மதிக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்கும் போது தான் தமிழில் உள்ள நல்லதை வடமொழியில் நம்மால் எடுத்துக் கூற முடியும்.

 

கம்பன் வட மொழியை கற்காவிட்டால், கம்பராமாயணம் நமக்கு கிடைத்திருக்காது. புதிய கல்விக் கொள்கையை தமிழிலும் - தாய் மொழியிலும் கற்றுக் கொள்ளுங்கள். பிற மொழியை கற்றுக்கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இன்னொரு மொழியை கற்பதால் வாய்ப்புகள் நமக்கு அதிகமாக இருக்கிறது. மற்றொரு மொழியை கற்பதை யாரும் தடுக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்