Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஜி20 ஆலோசனை கூட்டம்.. அழைப்பு விடுத்த மத்திய அரசு.. டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!

Sekar Updated:
ஜி20 ஆலோசனை கூட்டம்.. அழைப்பு விடுத்த மத்திய அரசு.. டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!Representative Image.

ஜி-20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், அடுத்த ஒரு ஆண்டிற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.

கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் இருத்தியில், அடுத்த தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜி20 நடைமுறைகளின்படி, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றது.

இந்நிலையில், இந்தியாவில் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு 2023 செப்டம்பரில் நடைபெற உள்ளது. மேலும் இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கும் இந்த ஒருவருட காலத்தில், அனைத்து மாநிலங்களிலும் ஜி 20 தொடர்பான கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில், நாளை டெல்லியில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு இந்தியா முழுவதும் உள்ள 40'க்கும்மேற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். கூட்டத்தை முடித்துக் கொண்டு நாளை இரவே அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்