தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மாற்று காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவு வரை மழை பெய்யக் கூடும்.
மேலும் திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலுார், கடலுார், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கடலுார், அரியலுார் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…