Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முடிந்தது கோடை விடுமுறை..! தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு..!!

Saraswathi Updated:
முடிந்தது கோடை விடுமுறை..! தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு..!!Representative Image.

தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்து 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை  அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2023-24ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்றும், முதல் வகுப்பு தொடங்கி  5ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், மே மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து, கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரமும் தொடங்கியதால், பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரத்திற்கு ஆளாகினர்.

வழக்கமாக மே மாதம் முழுவதும் நீடிக்கும் வெயில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியும் நீடித்ததால், பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து குறையாததால், ஜூன் 12ம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். மேலும், விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டதால், அந்த நாட்களை ஈடுகட்டும் வகையில், சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவ-மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வரும் 14ம் தேதி ஒன்று முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்