Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

EB உடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கரண்ட் பில் கட்ட முடியும்... மின்வாரியம் அதிரடி உத்தரவு..

Nandhinipriya Ganeshan Updated:
EB உடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கரண்ட் பில் கட்ட முடியும்... மின்வாரியம் அதிரடி உத்தரவு..Representative Image.

தமிழகத்தில் மூன்று கோடிக்கு மேல் மின் இணைப்புகள் இருக்கின்றன. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, மின்வாரிய ஆப், கூகுள் பே, ஃபோன் பே, மின்வாரிய இணையதளம் போன்றவற்றின் மூலம் நம்மில் பலரும் மின் கட்டணத்தை செலுத்து வருகிறோம்.  இந்தநிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. 

அதன்படி, நேரடியாக ஈபி ஆபிஸிற்கு சென்று மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையின் ஜெராக்ஸை எடுத்து சென்று ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணெய் இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளார்கள். இதற்கிடையில், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் மின்சார வாரியம் அறிவித்தது, இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை எல்லா இணைப்பிற்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டியிருப்பதால், ஏதாவது சிக்கல் வருமோ என்று நினைத்துக்கொண்டு, பலரும் இன்னும் இணைக்காமல் இருக்கின்றனர்.

இதனால், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்று திடீர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது மின்சார வாரியம். அதன்படி, ஆதார் எண்ணை இணைக்காத நவம்பர் 24 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்