Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மோசமான வானிலை.. ஏரிக்குள் பாய்ந்த உள்நாட்டு விமானம்.. மீட்பு பணிகள் தீவிரம்!!

Sekar November 06, 2022 & 16:29 [IST]
மோசமான வானிலை.. ஏரிக்குள் பாய்ந்த உள்நாட்டு விமானம்.. மீட்பு பணிகள் தீவிரம்!!Representative Image.

தான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குவதற்கு சற்று முன்னர், மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்திற்குள்ளானது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

புகோபா விமான நிலையத்தை நெருங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதால் கடலோர நகரமான டார் எஸ் சலாமில் இருந்து பிரிஸிசன் ஏர் விமானத்தில் பயணம் செய்த 43 பேரில் 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் பெரும்பாலும் ஏரியில் மூழ்கியிருக்கும் புகைப்படங்களை செய்தி அறிக்கைகள் காட்டுகின்றன. ககேரா மாகாண போலீஸ் கமாண்டர் வில்லியம் ம்வாம்பகேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் ஏராளமான மக்களை காப்பாற்ற முடிந்தது.

விமானம் சுமார் 100 மீட்டர் (328 அடி) நடுவானில் இருந்தபோது, அது சிக்கல்களையும் மோசமான வானிலையையும் சந்தித்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தண்ணீரில் மூழ்கியது. எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது.'' என்றார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ம்வாம்பகேல் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்