Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை...மதுபிரியர்கள் அதிர்ச்சி...!

madhankumar July 08, 2022 & 08:32 [IST]
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை...மதுபிரியர்கள் அதிர்ச்சி...!Representative Image.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றியவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், சிலர் பதவி விலகியதால் அந்த இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது, மேலும் வாக்கு எண்ணிக்கை அதன் மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன்படி கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என்று 498 ஊரக உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன.

நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மொத்தம் 510 உள்ளாட்சி பதவிகள் காலியாக இருக்கின்றன.

இந்த காலி இடங்களுக்கு நாளை ஜூலை 9 ஆம் தேதி தேர்தலும், வரும் ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நேற்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நாளுக்கு முன்னதாக நேற்று (7-ந் தேதி) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான நாளை 9ம் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியை சுற்றி 5கிமீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் உரிமம் பெற்ற பார்க்கலாம் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி மதுபானம் விற்போர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்