Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்...அதிரடி சரவெடி தான்..!

madhankumar July 07, 2022 & 16:56 [IST]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்...அதிரடி சரவெடி தான்..!Representative Image.

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு விளம்பரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விளம்பர படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

ஜூலை 28 ஆம் தேதி முதல் சென்னையை அடுத்து உள்ள மாமல்லபுறத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலியம்பியாட் போட்டி தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இதில்187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கடந்த வாரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான 14 விழிப்புணர்வு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் குறித்த விளம்பர படம் ஒன்று தயாராகி உள்ளதாகவும், இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளதாகவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விளம்பர படத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த படப்பிப்பு நேப்பியர் பாலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இதனால் நேப்பியர் பாலத்தில் சில மணி நேரங்கள் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான  தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்