Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Teachers Day 2022 Gift Ideas: ஆசிரியர் தினத்தில் உங்க ஆசிரியருக்கு என்ன கிஃப்ட் பண்ண போறீங்க..

Nandhinipriya Ganeshan September 03, 2022 & 17:20 [IST]
Teachers Day 2022 Gift Ideas: ஆசிரியர் தினத்தில் உங்க ஆசிரியருக்கு என்ன கிஃப்ட் பண்ண போறீங்க..Representative Image.

Teachers Day 2022 Gift Ideas: ஒழுக்கம், தன்னம்பிக்கை, கல்வி ஆகியவற்றை கற்பிக்கும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர் தினம் உலகளவில் அக்டோபர் 5 ஆம் தேதியும் மலேசியா, சீனா, ஸ்பெயின் உள்ள பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நம் நாட்டில் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை (செப்டம்பர் 05) ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் மனதிற்கு பிடித்த பரிசு வாங்கி கொடுத்தும், கேக் வெட்டியும் கொண்டாடுவார்கள். 

அப்படி நீங்களும் உங்க ஆசிரியருக்கு என்ன பரிசு வாங்கிக் கொடுக்கலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலைய விடுங்க. இதோ உங்களுக்கு உதவும் வகையில் சில ஐடியாக்கள். 

சாக்லேட்:

எந்த ஒரு நல்ல காரியத்தையும் இனிப்புடன் தொடங்கு வேண்டும் என்று சொல்வார்கள். அந்தவகையில், அனைத்து விதமான விழா நாட்களிலும் கொடுக்கும் சிறந்த பரிசாக முதல் இடத்தை பிடிப்பது சாக்லேட். ஆக இந்த ஆசிரியர் தினத்தில் வித்தியாசமான சுவையுடைய சாக்லெட்டுகளை வாங்கி கொடுக்கலாம். அப்படி இல்லையெனில், வீட்டிலேயே உங்க ஆசிரியருக்கு பிடித்த ஸ்வீட் ஒன்றை செய்து கொடுக்கலாம். 

புத்தகம்:

உங்க ஆசிரியருக்கு புத்தகம் படிப்பதில் அதிகம் விருப்பம் உள்ளவராக இருந்தால், அவர்களுக்கு ஒரு நல்ல பயனுள்ல புத்தகத்தை வாங்கி கொடுக்கலாம். இதன் மூலம் நீங்கள் அவர்களை எந்தளவிற்கு புரிந்து வைத்துள்ளீர்கள் என்பதை அவர்கள் உணரலாம். 

பேனா & டைரி: 

உங்க ஆசிரியர்கள் எப்போதும் உபயோகிக்கும் பொருளான பேனாவை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு அந்த பேனாவில் எழுதும் போதெல்லாம் உங்க நினைவு ஏற்படும். பேனாவோடு டைரியும் வாங்கிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு. 

வாழ்த்து அட்டை:

ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையிலான கவிதைகள் கொண்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி உங்க ஆசிரியர்களுக்கு பரிசளிக்கலாம். அப்படி இல்லையென்றால், வெறும் அட்டை மற்றும் வாங்கி அதில் உங்களுடைய சொந்த வார்த்தைகளையும் எழுதி கொடுக்கலாம். இதனால் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடையலாம். 

செடிகள்:

உங்களுக்கு அறிவியல் ஆசிரியர் மிகவும் பிடிக்குமென்றால், இந்த நாளில் காற்றை தூய்மையாக்கும் சில வகை செடிகளை வாங்கி பரிசளிக்கலாம். இது ஒரு அர்த்தமுள்ள பரிசாக இருக்கும். மேலும், உங்களின் மீது ஒரு நல்ல அபிபிராயத்தை ஏற்படுத்தும்.

பூ:

என்னால் அவ்வளவு விலை கொடுத்து எதுவும் வாங்க முடியாது என்று நினைக்கும் மாணவரா? கவலையே வேண்டாம். உண்மையான அன்பின் வெளிபாடு விலையுயர்ந்த பொருட்களில் மட்டும் கிடையாது சாதாரணமான ஒரு பூவில் கூட இருக்கலாம். ஆம், ஒரே ஒரு ரோஜா பூவை வாங்கி கூட உங்க ஆசிரியருக்கு பரிசாக கொடுக்கலாம். இதுவும் அன்பின் வெளிபாடே.

Teachers day gift 2022, teachers day gift ideas, teachers day gift for male teacher, teachers day gift ideas for female teacher, best gift for teachers day under 200, teachers day card, teachers day gift in low budget, gift for teacher, teachers day 2022 gift, gifts for teachers day 2022, teachers day gift in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்