Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தென்மண்டல கவுன்சில் கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!!

Sekar September 03, 2022 & 13:21 [IST]
தென்மண்டல கவுன்சில் கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!!Representative Image.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று கேரளாவின் தலைநகரில் நடக்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

மாநிலங்கள் இடையேயான பிரச்சினைகளை தங்களுக்குள் பேசித் தீர்க்கவும், ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், மண்டல அளவில் மாநிலங்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது நடத்துவது வழக்கம். இதற்காக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

தென் மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி இடம் பெற்றுள்ளன. லட்சத் தீவுகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் தென்மண்டல குழுவில் உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் அழைப்பின் அடிப்படையில் பபங்கேற்கும். அமித் ஷா தலைமையில் ஆண்டுக்கு ஒருமுறை இதன் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், 30வது தென்மண்டல கூட்டத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்கள் பங்கேற்காத நிலையில், அவர்களின் சார்பாக அவர்களது பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளாமல், அப்போது தமிழகம் சார்பாக அமைச்சர் பொன்முடி கலந்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினே நேரடியாக கலந்துகொண்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்