Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்...இந்த கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என விமர்சனம்.!

madhankumar August 07, 2022 & 12:11 [IST]
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்...இந்த கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என விமர்சனம்.!Representative Image.

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தால் ஒன்று பயனில்லை என கூறி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த நிதி ஆயோக் கூட்டமானது நேரடியாக நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த கூட்டம் நடைபெறவில்லை, கடந்த ஆண்டு காணொளி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு 7வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது.

இதில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பிற மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார், அந்த கடிதத்தில் "மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சி காணும். நிதி ஆயோகின் நிர்வாக கவுன்சில் கூட்டத்தால் எந்தப் பலனும் இல்லை.

மாநிலங்களை பாடுபடுத்தும் வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது எனவே இந்த கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மத்திய அரசின் அணைத்து கூட்டங்களையும் புறக்கணித்து வருகிறார், மேலும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்