Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரதமரின் தீபாவளி பரிசு.. 75,000 இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான ஆஃபர்!!

Sekar October 20, 2022 & 18:33 [IST]
பிரதமரின் தீபாவளி பரிசு.. 75,000 இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான ஆஃபர்!!Representative Image.

இந்த ஆண்டு தீபாவளி பரிசாக, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75,000 இளைஞர்களுக்கு வேலை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

மேலும் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வரும் சனிக்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் இளைஞர்களுடன் பிரதமர் உரையாடுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 75,000 இளைஞர்களுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில் வேலை வாய்ப்புக் கடிதங்கள் இந்த நிகழ்வின்போது வழங்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், தபால் துறை, உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய புலனாய்வுப் பிரிவு, சுங்கம் மற்றும் வங்கி போன்றவற்றில் இந்த வேலைகள் ஒதுக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து மத்திய அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

ஒடிசாவில் இருந்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், குஜராத்தில் இருந்து சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சண்டிகரில் இருந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், மகாராஷ்டிராவில் இருந்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ராஜஸ்தானில் இருந்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தமிழகத்தில் இருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனரக தொழில்துறை அமைச்சர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர பாண்டே, ஜார்கண்டிலிருந்து பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, பீகாரைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்து கொள்கின்றனர்.

மற்ற அமைச்சர்களும் பல்வேறு நகரங்களில் இருந்து இணைவார்கள். மேலும் அனைத்து பாஜக எம்.பி.க்களும் தங்கள் நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் இணைவார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்