Mon ,Nov 11, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

குருத்வாராவில் பயங்கர குண்டுவெடிப்பு!! வீடியோ வைரல்..!

madhankumar June 18, 2022 & 13:18 [IST]
குருத்வாராவில் பயங்கர குண்டுவெடிப்பு!! வீடியோ வைரல்..!Representative Image.

பல ஆண்டு நடந்த போரை அடுத்து ஆப்கானிஸ்தானில் 2021ஆகஸ்ட் 15ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காபூலில் உள்ள கர்தா பர்வான் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளது. இதில் இரண்டு ஆப்கானியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு முதல் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதற்கு அரைமணி நேரத்திற்குப் பிறகு இரண்டாவது வெடிச் சத்தம் எழுந்துள்ளதாக தெரிகிறது. மேலும் குருத்வாராவின் பாதுகாப்பு காவலாளியான அகமதுவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும், 3 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்