Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குமரியில் 10 ஆம் வகுப்பு மாணவி கடத்தல்.. மதபோதகர் அதிரடி கைது!!

Sekar July 25, 2022 & 19:08 [IST]
குமரியில் 10 ஆம் வகுப்பு மாணவி கடத்தல்.. மதபோதகர் அதிரடி கைது!!Representative Image.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி மதபோதகர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலி மதபோதகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொற்றையடி கரம்பை விளை பகுதியைச் சேர்ந்த 34 வயதான செந்தில்குமார் திருமணமானவர் மற்றும் மதபோதகராக இருந்து வருகிறார். இவருக்கு பூதப்பாண்டி பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தொழிலாளியின் வீட்டிற்க்கு சென்று வரும் அளவிற்கு வளர்ந்தது.

இந்நிலையில், அந்த தொழிலாளியின் மூன்றாவது மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த செந்தில்குமார் ஜெபம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய தொழிலாளி அடிக்கடி செந்தில்குமார் வீட்டிற்கு வர அனுமதித்துள்ளார்.

இந்நிலையில், செந்தில்குமார் தொழிலாளியின் 2 வது மகளான பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றுவிட்டார். இதையடுத்து மகள் கடத்தப்பட்டது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீசாருக்கு செந்தில்குமார் மாணவியுடன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டனர். இதன் ஒரு பகுதியாக செந்தில்குமாரின் மனைவியின் உதவி கோரப்பட்டது. 

இதையடுத்து செந்தில்குமாரின் மனைவி அவரிடம் பேசியதை அடுத்து செந்தில்குமார் திருவனந்தபுரத்திற்கு வர ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தான் கடத்திச் சென்ற மாணவியையும் அங்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் அதிரடியாக செயல்பட்டு செந்தில்குமாரை கைது செய்து, மாணவியை மீட்டனர். 

இதையடுத்து செந்தில்குமாரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்ததோடு, மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்