Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகரும், ஸ்டாலினின் நண்பருமான டிபி கஜேந்திரன் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..!

Gowthami Subramani Updated:
நடிகரும், ஸ்டாலினின் நண்பருமான டிபி கஜேந்திரன் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..!Representative Image.

திரையுலகில் கடந்த சில நாள்களாகவே, இயக்குநர்கள், நடிகர்கள் என தொடர் மரணங்கள் நடந்து வருகின்றன. பிரபல காமெடி நடிகர் மற்றும் இயக்குநரான டிபி கஜேந்திரன் இன்று இயற்கை எய்தினார்.

இவர், ராமராஜன் நடித்த எங்க ஊரு காவல் காரன், கார்த்தி நடித்த பாண்டிய நாட்டுத் தங்கம், சீனா தானா, பட்ஜெட் பத்பநாதன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயற்றியுள்ளார்.

மேலும், இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நடிகரும், ஸ்டாலினின் நண்பருமான டிபி கஜேந்திரன் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..!Representative Image

அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்து வந்தார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வகுப்புத் தோழராவார். ஸ்டாலின் கஜேந்திரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவருடைய வயது 68. நேற்று பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில், இன்று டிபி கஜேந்திரன் மரணமடைந்தது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்