Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேலியே பயிரை மேயலாமா...செல்போன் திருடிய போலீஸ்...அதும் யாருகிட்ட பாருங்க..!

madhankumar July 29, 2022 & 12:17 [IST]
வேலியே பயிரை மேயலாமா...செல்போன் திருடிய போலீஸ்...அதும் யாருகிட்ட பாருங்க..!Representative Image.

தற்கொலை செய்துகொண்ட சக போலீசிடம் இருந்து செல்போனை திருடிய போலீசார் அதனை விற்றுள்ளனர், இந்த செய்தி வெளியே தெரிந்த பின் இருவரும் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் அசோக் குமார் என்ற காவலர் பணியாற்றி வந்தார், இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்துகொண்டார், இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போதுவரை விசாரணை நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பான விசாரணைக்காக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரை தொடர்பு கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் எடுத்துவர கூறியுள்ளனர், ஆனால் அதில் அசோக்குமாரின் செல்போன் மட்டும் இல்லாமல் இருந்தது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அந்த செல்போனை ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது, இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அதை ஒரு கடையில் இருந்து வாங்கியதாக தெரிவித்தார், பின்னர் அந்த கடைக்கு சென்று விசாரித்ததில் அதனை இரண்டு போலீசார் கொண்டுவந்து விற்றதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார், இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இறுதியில் கேணிக்கரை காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் சுரேஷ் மற்றும் ஏட்டு கமலக்கண்ணன் ஆகிய 2 பேரும் அசோக்குமாரின் போனை திருடி விற்றது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் எஸ்.பி.உத்தரவின் பேரில் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் வேலியே பயிரை மேயலாமா போலீசாரே இப்படி திருடினால் பொதுமக்கள் யாரிடம் சென்று புகார் அளிப்பது என கூறிவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்