ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த காவலி பகுதியை சேர்ந்த கோட்டேஸ்வரராவ் என்பவர் தனது தாய் மகாலட்சுமி பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், தாயை கோபத்தில் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், தினமும் சண்டை நடந்து வருவதால் மகாலட்சுமி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த கோட்டேஸ்வரராவ் தனது சகோதரி வீட்டிற்கு சென்ற அவர் தனது தாயை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், அங்கிருந்து அவரது தாயை கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேலும், இது தொடர்பாக கோட்டேஸ்வரராவின் சகோதரி காவல்துறையில் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிபடையில் மகாலட்சுமியை மீட்ட போலீசார் கோட்டேஸ்வரராவை கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…