Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமெரிக்காவில் 8 மாத பிஞ்சு உட்பட 4 பேர் கொலை.. வெளியான பகீர் பின்னணி..

Nandhinipriya Ganeshan October 08, 2022 & 10:21 [IST]
அமெரிக்காவில் 8 மாத பிஞ்சு உட்பட 4 பேர் கொலை.. வெளியான பகீர் பின்னணி..Representative Image.

வாஷிங்டன்: 

அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய குடும்பம் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. இதில் 8 மாத குழந்தை உட்பட 4 பேர் கடத்தப்பட்டனர். இதற்கிடையே கடந்த புதன்கிழமை குற்றவாளி கடத்தப்பட்ட நபர்களில் ஒருவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்த முயன்று உள்ளான். அப்போது, போலீசார் அவரை அடையாளம் கண்டு பிடிக்க முயன்ற போது திடீரென அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

பின்னர், அவரை பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். குற்றவாளியை பிடித்தும் கடத்தப்பட்ட குடும்பத்தை பற்றிய எந்த விபரமும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மெர்சட் என்ற ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு தோட்டத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரது உடலையும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இச்சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், மெர்சட் போலீஸார் இச்சம்பவம் தொடர்பான சில முக்கிய தகவல்களை பகிர்ந்து உள்ளனர். அதாவது, கொலை செய்யப்பட்ட அந்த குடும்பத்தினருக்கும், அந்த குற்றவாளிக்கும் ஏற்கனவே பழைய பகை இருந்துள்ளது. 

குற்றவாளியான ஜீசஸ் மானுவேல் அந்த குடும்பத்தினரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏதோ சில விஷயங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. அன்றிலிருந்தே ஜீசஸ் அந்த குடும்பத்தினரை மிரட்டும் வகையில் மெசேஜ் மற்றும் மெயில் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. 

இது தொடர்பாக உறவினர்கள் கூறுகையில்,' பிஞ்சு குழந்தையைக் கூட விடாமல் கொலை செய்த அந்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதற்காக போலீசாருக்கு தேவையான ஒத்துழைப்பைக் கொடுக்கிறோம்' என்று தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்