Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

50 கி.மீ. வேகத்தில் சூறாவளி சுழன்றடிக்கும்; 2வது நாளாக மீனவர்கள் திண்டாட்டம்! 

KANIMOZHI Updated:
50 கி.மீ. வேகத்தில் சூறாவளி சுழன்றடிக்கும்; 2வது நாளாக மீனவர்கள் திண்டாட்டம்! Representative Image.

தூத்துக்குடி இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லாத விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலுக்கு தென்மேற்கே அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வங்க கடல் மன்னார்குளைடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் பகுதியில் 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த சூறாவளி காற்று வீச கூடும் எனவே ஆழ் கடலில் சென்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

 இதன் காரணமாக இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் 250 க்கும் மேற்பட் விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதே போன்று திரேஸ்புரம் தருவைகுளம் வேம்பார் வீரபாண்டியன் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுபடகு மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் ஏற்றுமதி மற்றும் விற்பனை நடைபெறாததால் பல கோடி ரூபாய் வர்த்தகம் இழப்பு ஏற்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்