Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொங்கல் பரிசாக ரூ.1000க்கு பதில் ரூ.2,500.. தமாகா தலைவர் வலியுறுத்தல்!!

Sekar Updated:
பொங்கல் பரிசாக ரூ.1000க்கு பதில் ரூ.2,500.. தமாகா தலைவர் வலியுறுத்தல்!!Representative Image.

2023 பொங்கலுக்கு தமிழக அரசு சார்பாக ரூ.1,000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்க உள்ளதாக அறிவித்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், அதை அதிகரித்து வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் இருந்த பொருட்கள் சில இடங்களில் தரமற்றதாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த முறை அதுபோன்ற எந்த புகாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, மக்கள் தாங்களே பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.1000 ரொக்கமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனுடன் ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பச்சரிசியும் வழங்கப்படுகிறது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில், தமாக தலைவர் ஜி.கே.வாசனும், ஏற்கனவே இதே கருத்தை கூறியிருந்தார். 

இந்நிலையில், தமிழக அரசு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்த நிலையில், குறைந்தபட்சம் ரூ.2500 ஆவது வழங்க வேண்டும் எனவும், கூடவே கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்