Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆசிரியர்களுக்கு ஆப்பு....இனிமே பள்ளிக்கு லேட்டா வந்த அவ்ளோதான்...!

madhankumar July 25, 2022 & 11:50 [IST]
ஆசிரியர்களுக்கு ஆப்பு....இனிமே பள்ளிக்கு லேட்டா வந்த அவ்ளோதான்...!Representative Image.

ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆசிரியர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செயலியில் தினமும் வருகைப்பதிவேடை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணிக்குள் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் மேலும் அவ்வாறு பதிவு செய்யவில்லை என்றல் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது செயலி அறிமுகப்படுத்தப்பட உளது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாத இறுதிக்கும் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பள்ளிகல்வித்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் புதிய ஆசிரியர் நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

அதில் தலைமை ஆசிரியல்கள், முதுகலை ஆசிரியர்கள், மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன் பள்ளிக்கு வர வேண்டும், மேலும் பள்ளியில் எந்த ஒரு நிகழ்வும் நாடாகும் பட்சத்தில் அதுகுறித்த தகவலை முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வகுப்பறை பற்றாக்குறையின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினாலோ மாணவர்களை மரத்தடியில் வைத்து வகுப்பு நடத்தக்கூடாது, பேருந்தில் வரும் மாணவர்கள் பேருந்தில் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்க கூட்டத்தில் தக்க அறிவுரைகள் தலைமை ஆசிரியரால் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் வருகை தந்த உடன் வருகை பதிவேட்டை தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு வைக்க வேண்டும் போன்ற பல்வேறு புதிய அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்