Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கட்டி அணைக்கும் தினத்தின் வரலாறும், அதன் முக்கியத்துவமும் | National Hugging Day

Vaishnavi Subramani Updated:
கட்டி அணைக்கும் தினத்தின் வரலாறும், அதன் முக்கியத்துவமும் | National Hugging DayRepresentative Image.

தேசிய கட்டிப்பிடித்தல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடிப்பதைக் கொண்டாட ஒரு தினமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ஆனால், இது முற்றிலும் உண்மை. கட்டிப்பிடிப்பது என்பது காதலர்கள், கணவன், மனைவி ஆகியோர்களுக்கு மட்டும் பொருந்தாது. நம் மனதிற்குப் பிடித்தவர்களை, அவர்கள் எந்த உறவாக இருந்தாலும் அவர்களை அன்பாகப் பாசமாக அரவணைப்பதும் ஆகும். ஆனால் ஏன் தேசிய ஹக்கிங் தினம் கொண்டாடப்படுகிறது? அதிலும் குறிப்பாக ஜனவரி 21 அன்று ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது பற்றி இதில் காண்போம்.

கட்டி அணைக்கும் தினத்தின் வரலாறும், அதன் முக்கியத்துவமும் | National Hugging DayRepresentative Image

உருவான காரணம்

✤1986 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள கிளியோ வில் உள்ள மக்கள் அனைவரும்  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த சில நாட்களிலே  உற்சாகம் குறைந்தும் மற்றும்  சோகமாகக் காணப்பட்டனர். அதனை அறிந்த  கெவின் ஜாபோர்னி இந்த சூழ்நிலை சரிசெய்வதற்கு அவர் புதிதாக ஒன்றைச் செய்து இந்த சூழ்நிலை சரிசெய்யவேண்டும் என யோசனையில் உருவானது இந்த தேசிய கட்டிப்பிடி தினம்.

✤இந்த தினத்தை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்குப் பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து இந்த கட்டிப்பிடி தினத்தை மகிழ்ச்சியுடனும் மற்றும் மன ஆறுதலுடன் கொண்டாடினர். இந்த தினத்தில் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஒருவரை ஒருவர் அன்பாகப் பாசமாக அரவணைத்துக் கொண்டனர்.

கட்டி அணைக்கும் தினத்தின் வரலாறும், அதன் முக்கியத்துவமும் | National Hugging DayRepresentative Image

தன்னம்பிக்கை உருவாதல்

✤இந்த ஹக்கிங் தினத்தை  மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள் அல்லது மனத்திற்கு பிடித்தமானவருடன் சேர்ந்து கொண்டாடுகின்றர்.இதனால் மனதில் இருக்கும் சோகம், மனஅழுத்தம், தனிமையில் இருப்பது போன்ற உணர்வுகள் மற்றும் பல மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளைக் கட்டிப்பிடிப்பதனால் முழுவதுமாக குறையும்.

✤நமக்கு பிடித்தமானவர்களை அரவணைத்துக் கொள்வதால் மனதில் புதிதாகப் புத்துணர்ச்சி பெற்று தன்நம்பிக்கை அதிகரிக்கும்.

✤இந்த தினத்தில் நாம் விரும்பு நபர் வெகுதொலைவிலிருந்து நம்மால் பார்க்க முடியவில்லை என வருந்த வேண்டாம்.சிறிது நிமிடம் கண்களை மூடி அவர்களுடன் சேர்ந்து இருந்த நாட்களை  நினைத்தால்,மனதில்  உள்ள துன்பங்களை நீக்கி இனிமையான அனுபவத்தைத் தரும்.

கட்டி அணைக்கும் தினத்தின் வரலாறும், அதன் முக்கியத்துவமும் | National Hugging DayRepresentative Image

சதவீதம் மற்றும் எண்களின் அடிப்படையில்

✤கட்டிப்பிடிப்பதெற்கன நேரமும் ஆய்வு செய்யப்பட்டு, அதனால் என்ன பலன்களைப் பெறலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, 

✤தினமும்  12 முறை அணைப்பதால் மனிதர்கள் மிகவும் ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் குறைவாகவும் இருப்பார்.

✤ஒரு ஹக் சராசரியாக 20 வினாடிகளுக்கு ஒரு முறை அணைப்பதால் அதிக அளவில் மனதில் ஏற்படும் அழுத்தத்தை 32% குறைக்கும்.

கட்டி அணைக்கும் தினத்தின் வரலாறும், அதன் முக்கியத்துவமும் | National Hugging DayRepresentative Image

✤ஒரு நாளைக்கு நான்கு முறை கட்டிப்பிடிப்பதால் மூளையில் ஆக்ஸிடாசினை உருவாகும்.இந்த வேதிப்பொருள் மூளையில் சுரப்பதால் மகிழ்ச்சி எண்ணம் ஏற்படுகிறது.

✤உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், மன அழுத்தைக் குறைக்கவும் இந்த கட்டிப்பிடித்தல் என்பது உதவும்.

✤இந்த ஹக் என்பது ஒருவர் மற்றொருவருக்குச் சரியான நேரத்தில் செய்தல் அது ஒரு சைகை மொழியாக மாறும்.

✤உங்கள் இனிமையான அனுபவங்களை நினைவு கொள்ள வைக்கும் இந்த நாளினை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் தேசிய ஹக்கிங் தின வாழ்த்துக்கள்….!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்