Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொது சிவில் சட்டம் - கருத்துத் தெரிவிக்க இன்றே கடைசி நாள்..!

Saraswathi Updated:
பொது சிவில் சட்டம் - கருத்துத் தெரிவிக்க இன்றே கடைசி நாள்..!Representative Image.

பாஜக அரசு அமல்படுத்தத் திட்டமிட்டுள்ள பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க இன்றே கடைசி நாள் என இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

திருமணம், விவகாரத்து, வாரிசுரிமை உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்தும் வகையில், பாஜக பொதுசிவில் சட்டத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியும் அளித்திருந்தது. ஆனால், இந்தச் சட்டத்திற்கு, முஸ்லிம் அமைப்புகளும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. அண்மையில், திமுக பொதுச்செயலாளர், இந்த விவகாரத்திற்கு திமுகவின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், இந்திய சட்ட ஆணையத்திற்கு நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த பொதுசிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி இந்திய சட்ட ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பொதுசிவில் சட்டம் குறித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், எழுத்துப்பூர்வமாகவும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை இன்னும் கூடும் என்றும இந்திய சட்ட ஆணையம் கூறியுள்ளது.

பொதுசிவில் சட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில அமைப்புகள் இந்தச் சட்டம் குறித்து நேரில் கருத்துத் தெரிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களை அழைத்து கருத்துக் கேட்பது குறித்து சட்ட ஆணையம் விரைவில் முடிவு எடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்