Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜுலை.16ல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - தரிசனத்திற்கான ஆன்லைன் பதிவு விறுவிறு..!

Saraswathi Updated:
ஜுலை.16ல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - தரிசனத்திற்கான ஆன்லைன் பதிவு விறுவிறு..!Representative Image.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் செல்கின்றனர். ஒவ்வொரு சிறப்பு நாட்களின்போதும் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அந்த வகையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலையில் வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மேல்சாந்தி யெராமன் நம்பூதிரி தீபம் ஏற்றியபின், 18ம் படிக்குக் கீழ் உள்ள ஆழிகுண்டத்தில் அக்னி வளர்க்கப்படும். தொடர்ந்து, பக்தர்கள் படியேறிச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். 16ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.

தொடர்ந்து, ஜூலை 17ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஆடி மாத பிறப்பையொட்டி, தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய் அபிஷேகம் செய்வார். அதன்பின், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படவுள்ளது. ஜூலை 21ம் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பலவிதமான பூஜைகள் ஐயப்பனுக்கு நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத சிறப்பு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு தீவிரமாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்