Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரயிலில் தொங்கியபடி பயணம்...3 ஆண்டுகளில் இத்தனை வழக்குகளா?

madhankumar May 29, 2022 & 16:55 [IST]
ரயிலில் தொங்கியபடி பயணம்...3 ஆண்டுகளில் இத்தனை வழக்குகளா?Representative Image.

சென்னை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீர் ரயில்களில் படியில் பயணம் செய்த நபர்களிடம் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுவாரியாக அபராத விபரம்:

கடந்த 2020ல் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த 965 போ் மீது வழக்குகள் பதிந்து, ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. 

அதே போல் கடந்த 2021ல் ரயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது மேலும் 890 போ்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

மேலும் 2022ல் தற்போது வரை 364 போ் மீது வழக்குகள் பதிந்து, ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 2020-ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் 2,219 போ் மீது வழக்குகள் பதிந்து, மொத்தம் ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்