Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உக்ரைன் MBBS மாணவர்கள் தமிழகத்தில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை.!

madhankumar May 16, 2022 & 08:29 [IST]
உக்ரைன் MBBS மாணவர்கள் தமிழகத்தில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை.!Representative Image.

ரஷ்யா உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரால் அங்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்துவந்த இந்திய மாணவர்கள் அங்கு படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் இந்திய அரசால் பத்திரமாக மீட்டுகொண்டுவரப்பட்டனர்.

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து வெளியேறிய தமிழர்களின் நலம் காக்க உருவாக்கப்பட்ட உக்ரைன் MBBS மாணவர்களின், பெற்றோர் கூட்டமைப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் உக்ரைன் MBBS மாணவர்களின் பெற்றோர் கூட்டமைப்பு தலைவர் எம்.ஆர்.குணசேகரன், பொதுச் செயலர் வி.கண்ணன், பொருளாளர் எஸ்.திலீப்குமார், ஒருங்கிணைப்பு செயலர் டாக்டர் என்.ராமநாதன் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில் பேசப்பட்டதாவது: உக்ரைன் போர் காரணமாக அங்கு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் 1,896 பேர் திரும்பி வந்துள்ளனர். அவர்களின் படிப்பை தற்போது தொடரமுடியாத நிலையில் உள்ளனர். இதே போன்ற நிலையில் இந்தியா முழுவதும் 16ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றனர், இதில், 4 ஆயிரம் பேர் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் ஆவர்.

அவர்கள் இந்தியாவிலேயே பயிற்சியை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 67 மருத்துவக்கல்லூரிகள் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 600 உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் 27 இடங்களை அதிகரித்தால் மீதமுள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு இடம்அளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் இங்கேயே படிப்பை தொடர அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறைஅமைச்ச கூறும்போது: உக்ரைனை போலவே மருத்துவ பாடத்திட்டம் கொண்ட போலந்து போன்ற 6 நாடுகளில் மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர உதவி செய்யவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்