Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சொந்த அணையை உடைத்த உக்ரைன் ராணுவம்...வெள்ளக்காடான கிராமம்

Bala May 16, 2022 & 16:06 [IST]
சொந்த அணையை உடைத்த உக்ரைன் ராணுவம்...வெள்ளக்காடான கிராமம்Representative Image.

ரஷ்யா படைகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உக்ரைனில் உள்ள ஒரு கிராம மக்கள் அணையை உடைத்து கிராம முழுவதும் வெள்ளத்தை ஏற்ப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யா மற்றும் உகரைன் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. மேலும் மேறகத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளதால் ரஷ்ய திணறி வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கு எதிரான நகர்வுகளை நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள்  தீவிரமாக செய்து வருகின்றன.அதன்படி உலகின் மிகப்பெரிய படைகளை கொண்ட ரஷ்யாவை உக்ரைனில் வைத்து சமாதி கட்ட துடித்து வரும் நேட்டோ, உக்ரைனுக்கு ஆதரவாக உளவுத் தகவல்களையும், பல நவீன ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.இந்த போரில் ரஷ்யா தனது நவீன அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என்றும், இந்த போர் உக்ரைனுடன் முடியாது, அதன் அண்டை நாடுகளான போலாந்து மற்றும் சுவிடன் உடன் ரஷ்யா மோதும் என பொய் தகவல்கள் பரவி வந்தன. 

மேலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா எல்லை அருகே நேட்டோ தனது அணு ஆயுதப்படைகளை குவிக்கவுள்ளதாகவும், ரஷ்யாவின் எதிர்கால தாக்குதலை மனதில் வைத்து இந்த படைகள் நகர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மாஸ்கோ ரஷ்யா எல்லை அருகே அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டால் ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்தது.

இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் விதமாக உக்ரைன் தலைநகர் கியூ அருகே உள்ள கிராம மக்கள், அணையை உடைத்து செயற்கையான வெள்ளத்தை ஏற்படுத்தினார். இந்த செயற்கையான வெள்ளம் மூலம் ரஷ்ய படைகள் நகர்வது தடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்