Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

China recalls its citizens from Pakistan : உசுரு முக்கியம்.. எல்லோரும் திரும்பிடுங்க.. பாகிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றும் சீனா!!

Sekar May 16, 2022 & 15:43 [IST]
China recalls its citizens from Pakistan : உசுரு முக்கியம்.. எல்லோரும் திரும்பிடுங்க.. பாகிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றும் சீனா!!Representative Image.

China recalls its citizens from Pakistan : பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் சீன நாட்டினரை குறிவைத்து சமீபத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி சிலரைக் கொன்றிருந்த நிலையில், பாதுகாப்பு கருதி சீனர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அந்நாடு வலியுறுத்தியுள்ளது.

கராச்சி பல்கலைக்கழகத்தின் கன்பூசியஸ் மையத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் பயிற்றுநர்களாக உள்ளனர். இந்த கண்பூசியஸ் மையம் 2013 இல், கராச்சி பல்கலைக்கழகத்தில் சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து கூட்டாக நிறுவப்பட்டது. 

இந்த நிறுவனம் சீன மொழியான மாண்டரின் கற்பித்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மக்களிடையே பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26 அன்று கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு வெளியே சீன நாட்டினரை குறிவைத்து கராச்சி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 3 சீன பிரஜைகள் உட்பட 4 பேர் பலியாகினர்.

கண்பூசியஸ் மையத்தின் இயக்குனர் டாக்டர் நசீர் உடின் கூறுகையில், கராச்சி பல்கலைக்கழகம் மட்டுமல்ல, நாட்டில் உள்ள பல்வேறு கன்பூசியஸ் நிறுவனங்களின் ஆசிரியர்கள் சீனாவால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றார். எனினும் கன்பூசியஸ் மையம் மூடப்படாது என்றும் மாண்டரின் மொழியைக் கற்பிக்க பாகிஸ்தானிய ஆசிரியர்களிடம் உதவி கேட்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, கடந்த மாதம் கராச்சியில் ஒரு மினிபஸ் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள சீனர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை நிலவுவதாக சீன அரசு கருதுகிறது. மேலும் பாகிஸ்தானில் தற்போது சீனாவிடம் முழுமையாக அடங்கிப் போகும் இம்ரான் கான் அரசும் இல்லாததால், தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என அந்நாடு கருதுவதாக அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்