Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொடூரத்தின் உச்சம்.. பலாத்காரம் செய்யப்பட்ட கர்ப்பிணி சிறுமி உயிரோடு எரிப்பு!!

Sekar October 09, 2022 & 15:01 [IST]
கொடூரத்தின் உச்சம்.. பலாத்காரம் செய்யப்பட்ட கர்ப்பிணி சிறுமி உயிரோடு எரிப்பு!!Representative Image.

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கர்ப்பிணி சிறுமி, உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் 3 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எரித்துக்கொல்லப்பட்ட சிறுமியின் தாயின் கூற்றுப்படி, மூன்று மாதங்களுக்கு முன்பு, அதே கிராமத்தில் வசிக்கும் அபிஷேக் என்பவனால் தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், ஆனால் மகள் இதை குடும்பத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பின்னர், சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனை சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிராம பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அக்டோபர் 6-ம் தேதி (வியாழன்) அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு பஞ்சாயத்து கூறியது.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் பாதிக்கப்பட்ட சிறுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர் மீது பெட்ரோலை தெளித்து, தீ வைத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட சிறுமி, மெயின்புரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேம்பட்ட சிகிச்சைக்காக சைஃபாய்க்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஐபிசி பிரிவு 307, 376 மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்