Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெல்லி - கத்ரா வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Vande Bharat Train Delhi to Katra

Nandhinipriya Ganeshan Updated:
டெல்லி - கத்ரா வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Vande Bharat Train Delhi to Katra Representative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. 

அக்டோபர் 03.2019 அன்றிலிருந்து இந்தியாவின் 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை டெல்லி முதல் கத்ரா வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதே பாதையில் செல்லும் மற்ற ரயில்களை விட 5 மணி நேரத்திற்கு முன்னதாகவே டெல்லியில் இருந்து கத்ரா சென்றடைந்துவிடுகிறது. இந்த பதிவில் டெல்லி - கத்ரா வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம். 

வழி: 

இந்த ரயில் வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் இந்த ரயில் அம்பாலா காண்ட் ஜங்ஷன், லூதினா ஜங்ஷன், ஜம்மு தாவி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பொதுவாக டெல்லி - கத்ரா [655 கி.மீ தூரம்] பயண நேரம் கிட்டத்தட்ட 12 மணிநேரம் ஆகும். ஆனால், வந்தே பாரத் வெறும் 8 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது. 

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

டெல்லி - கத்ரா [எண்: 22439]

 

கத்ரா - டெல்லி [எண்: 22440]

அக்டோபர் 03, 2019

செவ்வாய் கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

655 கிமீ

08.00 மணி நேரம்

06.00 AM - 02.00 PM

 

03.00 PM - 11.00 PM

 

டெல்லி - கத்ரா வந்தே பாரத் ரயில் நேர அட்டணை [எண்:22439]: 

தினமும் காலை 06.00 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 08.05 மணிக்கு அம்பாலா காண்ட் ஜங்ஷனை சென்றடையும். காலை 08.10 க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 09.19 க்கு லூதினா ஜங்ஷனை சென்றடையும். அங்கிருந்து காலை 09.21 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.38 க்கு ஜம்மு தாவி ரயில் நிலைத்தை அடையும். பின்னர், அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.00 மணிக்கு கத்ரா ரயில் நிலையத்தை சென்றடையும்.

டெல்லி - கத்ரா [எண்: 22439]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

டெல்லி

-

06.00 AM

அம்பாலா காண்ட்

08.05 AM

08.10 AM

லூதினா ஜங்ஷன்

09.19 AM

09.21 AM

ஜம்மு தாவி

12.38 PM

12.40 PM

கத்ரா

02.00 AM

-

 

கத்ரா - டெல்லி வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்:22440]:

மறுமார்க்கமாக கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 03.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 11.00 மணிக்கு டெல்லியை வந்தடையும்.

 

கத்ரா - டெல்லி [எண்: 22440]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

கத்ரா

-

03.00 PM

ஜம்மு தாவி

04.13 PM

04.15 PM

லூதினா ஜங்ஷன்

07.30 PM

07.32 PM

அம்பாலா காண்ட்

08.48 PM

08.50 PM

டெல்லி

11.00 PM

-

 

கட்டணம்: 

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, டெல்லி முதல் கத்ரா வரை செல்ல சேர் காரில் ரூ.1630 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.3015 வசூலிக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கத்ரா முதல் டெல்லி வரை செல்ல சேர் காரில் ரூ.1570 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.2965 கட்டணமாக வசூலிக்கப்படும். 

வந்தே பாரத் ரயில்

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

டெல்லி - கத்ரா [எண்:22439]

ரூ.1630

ரூ.3015

கத்ரா - டெல்லி [எண்:22440]

ரூ.1570

ரூ.2965

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்