Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காவி நிறத்திற்கு மாறும் வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள் விளக்கம்! | Vande Bharat Express

Baskaran. S Updated:
காவி நிறத்திற்கு மாறும் வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள் விளக்கம்! | Vande Bharat ExpressRepresentative Image.

டெல்லி: வந்தே பாரத் ரயில்கள் எளிதில் அழுக்காகி பராமரிப்ப்பது கடினமாக உள்ளதால், வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் அதிகவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அலகாபாத்-வரணாசி இடையேயான சேவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் இந்த சேவை நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் 26 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை - மைசூர் இடையேவும், சென்னை - கோவை இடையேவும், திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேவும் தலா ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுகிறது. 

இதையடுத்து, ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், ‘மெட்ரோ வந்தே பாரத்’ ரயில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், புறநகர் வந்தே பாரத் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எஃப்-ல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2023-24-ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எளிதில் அழுக்காகி பராமரிப்பது கடினமாக உள்ளதால், நிறத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்