Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்து அடையாளத்துடன் தலைமறைவு வாழ்க்கை.. மங்களூரு குண்டுவெடிப்பில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள்..!!

Sekar Updated:
இந்து அடையாளத்துடன் தலைமறைவு வாழ்க்கை.. மங்களூரு குண்டுவெடிப்பில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள்..!!Representative Image.

மங்களூரு ஆட்டோரிக்ஷா குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான முகமது ஷாரிக், தலைமறைவாக இருந்தபோது தனது உண்மையான அடையாளத்தை மறைப்பதற்காக தன்னை ஒரு இந்துவாகக் காட்டிக்கொண்டதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், நவம்பர் 19-ம் தேதி பெங்களூரு அருகே டெட்டனேட்டர், வயர்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் பிரஷர் குக்கரில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு ஆட்டோரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடித்தது.

இந்த சமபவத்தி ஷாரிக் தீக்காயங்களுக்கு ஆளாகி, தற்போது நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குண்டுவெடிப்புக்குப் பிறகு, அவரிடமிருந்து ஹூப்பள்ளியைச் சேர்ந்த பிரேம் ராஜ் ஹுடாகியின் ஆதார் அட்டையை போலீஸார் கண்டுபிடித்தனர்.

மங்களூரு பயங்கரவாத கிராஃபிட்டி வழக்கில் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்ட குண்டுவெடிப்பு குற்றவாளி ஷாரிக் தான் இது என்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கையில் இறங்கின.

மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் கூற்றுப்படி, பயங்கரவாத கிராஃபிட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரிக், உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தலைமறைவாகி கன்னியாகுமரி, கொச்சி, கோவை, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மைசூருவில் உள்ள மோகன் குமார் வீட்டில் அவர் வாடகைக்கு தங்கியிருப்பதை கண்டுபிடுத்து, அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் சிக்கியுள்ளன. 

இது தொடர்பாக பேசிய கர்நாடக காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) அலோக் குமார், "மைசூருவில் உள்ள ஷாரிக் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்து தீப்பெட்டி, சல்பர், பாஸ்பரஸ், பேட்டரிகள், சர்க்யூட் மற்றும் நட் மற்றும் போல்ட் ஆகியவற்றைக் கண்டுபிடித்தோம். வீட்டின் உரிமையாளரான மோகன் குமாருக்கு இவை தெரியாது” என்று தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பல்லாரியில் வசிக்கும் இந்து ஒருவரின் பெயரில் சிம் கார்டை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க கோயம்புத்தூரில் உள்ள ஈஷா அறக்கட்டளையின் சிவன் சிலையின் படத்தை தனது வாட்ஸ்அப் காட்சி படமாக வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர் மைசூருவில் தங்கியிருந்தபோது உருது உச்சரிப்பு இல்லாமல் கன்னடத்தில் பேசுவார் என்றும், அனைத்து இந்து பண்டிகைகளையும் ஆர்வத்துடன் கொண்டாடியதாகவும், இதனால் அவரது உண்மையான அடையாளம் யாருக்கும் தெரிவிக்கவில்லை என்றும் அப்பகுதியைச்  மக்கள் கூறினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்