Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடியரசு துணை தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு..!

madhankumar June 29, 2022 & 18:47 [IST]
குடியரசு துணை தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு..!Representative Image.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,  ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையும் அன்றே நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டின் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 17ம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிப்பார்கள். குடியரசு துணை தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரும் ஜூலை 18-ம் தேதி நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் 21-ம் தேதி எண்ணப்படவுள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். மேலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்