Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை....நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

madhankumar July 11, 2022 & 13:21 [IST]
விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை....நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!Representative Image.

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்தவர் கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாள விஜய் மல்லையா. கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவானார். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி விஜய் மல்லையா மீது வழக்கு ஒன்று தொடர்ந்தது. அதில், நீதிமன்ற உத்தரவை மீறி விஜய்மல்லையா தனது பிள்ளைகளுக்கு 40 மில்லியன் டாலர் அளவுக்கு பரிவர்த்தனை செய்ததாக குற்றம் சுமத்தியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரின் மீது சுமத்தப்பட்ட வழக்கை உறுதி செய்தது. இதனால் விஜய்மல்லையா தரப்பில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விஜய் மல்லையா, நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் வாயிலாக கோர்ட்டில் ஆஜராக பலமுறை வாய்ப்பு அளித்தது. இருப்பினும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தட்டிக் கழித்து வந்தார்.

இந்த நிலையில் தன விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதி மன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் ரூ.4 கோடி டாலர் பணத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்