Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

#Viral_Video : ஜாலியாக நடனம்.. மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த நபர்!!

Sekar September 03, 2022 & 18:34 [IST]
#Viral_Video : ஜாலியாக நடனம்.. மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த நபர்!!Representative Image.

பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், மேடையில் சந்தோசமாக நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இந்த சம்பவம் நடந்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. வீடியோவில், இறந்தவர் பிரபல பாலிவுட் பாடலான ஏக் லட்கி சாஹியே பாடுவதைக் காணலாம். அவர் திடீரென்று சரிந்து விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவனைக்கு தூக்கிச் சென்றனர்.

எனினும் அந்த நபர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நபர் பிரபாத் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பரேலி இந்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தில் (IVRI) உதவி தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார்.

இறந்தவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பு பேட்மிண்டன் விளையாடியதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அவர் மயங்கி விழுந்ததும், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டு சிபிஆர் கொடுக்கப்பட்டது. பெரிய மாரடைப்பு என்பதால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

बरेली की घटना। डांस करते हुए दिल का दौरा पड़ा और वहीं दुनिया छोड़ गए। लगातार ऐसी घटनाएँ आ रही है pic.twitter.com/b51yIysoOJ

— Narendra nath mishra (@iamnarendranath) September 2, 2022

முன்னதாக இந்த ஆண்டு மே மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது, அதில் ஒரு நடுத்தர வயது நபர் ஒரு விருந்தில் இரண்டு பெண்களுடன் நடனமாடும்போது இறந்தார். இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக ஊடக பயனர் பிரதீக் துவா பகிர்ந்துள்ளார்.

அந்த நபர் பாலிவுட் பாடலுக்கு இரண்டு பெண்களுடன் நடனமாடுவதைக் காண முடிந்தது, திடீரென்று சுருண்டு விழுந்து இறந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, பல பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக காலமானார்கள், இது ஆண்களிடையே நவீன வாழ்க்கை முறை பற்றிய விவாதத்தைத் தூண்டியது. இந்த பிரபலங்களில் கேகே, சித்தார்த் சுக்லா, புனித் ராஜ்குமார், பிரதீப் பட்வர்தன், பிரம்ம ஸ்வரூப் மிஸ்ரா, மிதிலேஷ் சதுர்வேதி மற்றும் பலர் அடங்குவர்.

கடந்த மாதம், ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்