Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொட்டித் தீர்க்கும் மழை.. தத்தளிக்கும் பெங்களூர்.. மக்கள் கடும் அவதி!!

Sekar September 05, 2022 & 14:49 [IST]
கொட்டித் தீர்க்கும் மழை.. தத்தளிக்கும் பெங்களூர்.. மக்கள் கடும் அவதி!!Representative Image.

கனமழை காரணமாக பெங்களூருவில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி இயல்பு வாழ்க்கை கிட்டத்தட்ட ஸ்தம்பித்துள்ளது.நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால், இன்று காலை நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

பெங்களூரு முழுவதும் உள்ள பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் அலுவலகங்களுக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

பல வாகனங்கள் நீரில் மூழ்கின. மழையால் மாரத்தஹள்ளி - சில்க் போர்டு சந்திப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் மழைநீர் தேங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரிச்மண்ட் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

மேலும் பெங்களூரில் உள்ள மாரத்தஹள்ளியில் உள்ள ஐடி நிறுவனங்களின் மையமான ஈகோஸ்பேஸ் பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் சாப்ட்வேர் ஊழியர்கள் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எக்கோ வேர்ல்ட் மற்றும் அவுட்டர் ரிங் ரோடு அருகே கடும் தண்ணீர் தேங்கி நிற்கிறது மற்றும் போக்குவரத்து மிகவும் மெதுவாக உள்ளது என எச்ஏஎல் விமான நிலைய போக்குவரத்து போலீசார் போக்குவரத்து ஆலோசனை வழங்கியுள்ளனர். 

தலைநகர் பெங்களூரு உட்பட கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களூருவுக்கு செப்டம்பர் 7 வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால், மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் இருந்து ரூ.7,647.13 கோடி அளவுக்கு மழையினால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி ரூ.1,012.5 கோடி நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்பவுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்