Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இருசக்கர வாகனத்தில் புகுந்த கட்டு விரியன் பாம்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு!

selvarani Updated:
இருசக்கர வாகனத்தில் புகுந்த கட்டு விரியன் பாம்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு!Representative Image.

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் கட்டு விரியன் பாம்பு புகுந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசுதுறை கட்டிடங்கள் உள்ளன. பல இடங்களில் அலுவலகங்கள் செயல்படாமல் பூட்டப்பட்டும், புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது அலுவலகங்களுக்குள் பாம்புகள் படை எடுப்பது, ஆட்சியர் அலுவலக வாளாகத்தில் உலா வருவதும் உண்டு.

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் அடிக்கடி பாம்புகள் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று அரசு ஊழியர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு பணிகளை முடித்துவிட்டு எடுக்கும்போது வாகனத்தில் பாம்பு ஏறி இருப்பதை கண்டு அந்தப் பாம்பை விரட்ட முயன்றார். ஆனால் பாம்பு அவரது வாகனத்தில் செயின் ப்ரேக்கெட்டில் உள்ளே சென்றது. இதனைத் தொடர்ந்து அந்த பாம்பை விரட்ட முயலும் போது பாம்பு இருசக்கர வாகனத்தில் உள்ள செயினில் சிக்கி உயிரிழந்தது.

பின்னர் அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறிய பாம்பை அப்புறப்படுத்தினர். அந்த பாம்பு கொடிய விஷம் உள்ள கட்டுவிரியன் பாம்பு என கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்