Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'மணிப்பூர் சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது' - உச்சநீதிமன்றம் காட்டம்..!

Saraswathi Updated:
 'மணிப்பூர் சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது' - உச்சநீதிமன்றம் காட்டம்..!Representative Image.

மணிப்பூர் மாநிலத்தின் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் வேலை என்றும், சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மணிபூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்களுக்கும், குகி பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் வெடித்துவருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பல தீவைப்பு சம்பவங்கள், தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கலவரத்தில் இதுவரை சுமார் 150க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், குகி பழங்குடியின மக்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கக் கோரி மணிப்பூர் பழங்குடி கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதேபோல், மணிப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல தரப்புகள் மூலமும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்ற தலைமை டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று மணிப்பூர் அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்த நீதிபதிகள், வன்முறைக்கு முடிவுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த யோசனைகளை இன்று (ஜூலை.11) தெரிவிக்குமாறு அனைத்து மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்டனர். 

அப்போது, மணிப்பூர் பழங்குடியின கூட்டமைப்பு சார்பில் வாதாடி வழக்கறிஞர், வன்முறையால் பலி எண்ணிக்கை110ஆக உயர்ந்துள்ளதாகவும், மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடிப்பதாகவும் கூறினார். அதற்கு, 'உங்களின் கருத்திற்காக நாங்கள் சட்டம்-ஒழுங்கை கையில் எடுக்க முடியாது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் வேலை. பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நாங்கள் உத்தரவு மட்டுமே பிறப்பிக்க முடியும். அதற்குத்தான் உங்களின் உதவியை கேட்கிறோம்' என்றனர்.

இதைத் தொடந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதாகத் தெரிவித்தார். அதற்கு மணிப்பூர் பழங்குடியின கூட்டமைப்பின் வழக்கறிஞர், மாநிலத்தில் ஒவ்வொருவரும் குகி பழங்குடியின மக்களுக்கு எதிராக இருப்பதாகக் குற்றம்சாட்டினார். இதனால், கோபமடைந்த நீதிபதிகள், மணிப்பூரில் பதற்றத்தை தூண்டிவிட நீதிமன்றத்தை களமாக பயன்படுத்தக் கூடாது என்று கண்டித்தனர். இந்நிலையில், இந்த வழக்குகள் தொடர்பாக இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்