Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மனநோய் ஒரு மிகக் கொடிய நோய்.. முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி!

Saraswathi Updated:
மனநோய் ஒரு மிகக் கொடிய நோய்.. முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி!Representative Image.

டிஐஜி விஐயகுமார் தற்கொலை சம்பவத்திலிருந்து, மனநோய் ஒரு மிகக் கொடிய நோய் என்பது தெரிய வந்துள்ளதாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

சென்னை தரமணியில் தனியார் நிறுவனம் நடத்திய சைக்கிள் கண்காட்சியை தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'சிறுவர்கள் படிக்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்காமல், சைக்கிள் ஓட்ட வேண்டும். இதனால் உடல் மற்றும் மனநலம் நன்றாக இருக்கும். சிறு மற்றும் குறு தொழில் தமிழ்நாட்டில் பெருகிவரும் வேளையில், உயர் ரக சைக்கிள்களை வெளிநாட்டிலிருந்து வாங்குவதற்குப் பதிலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றார். 

தொடர்ந்து, டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சைலேந்திரபாபு, டிஐஜி விஜயகுமாரின தற்கொலை துரதிஷ்ட வசமானது. முன்கூட்டியே அவருக்கு மன அழுத்தம் இருந்துவருவது தெரியவந்துள்ளது. அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார். இதனை மீறி நடந்த சம்பவத்திலிருந்தே மனநோய் என்பது ஒரு மிக கொடிய நோய் என தெரியவருகிறது.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக காவலர்களின் மன அழுத்தத்தைப்போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உயர்தர மனநலப் பயிற்சியாளர்கள் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் குடும்பத்தார், நண்பர்கள், சக காவல்துறையினர் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' இவ்வாறு அவர் பதிலளித்தார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்