Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

18 நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி..! இந்தியாவுக்கு ஐ.நா.சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் பாராட்டு..!!

Saraswathi Updated:
18 நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி..! இந்தியாவுக்கு ஐ.நா.சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் பாராட்டு..!!Representative Image.

ரஷ்யா-உக்ரைன் போரால் உணவுப் பாற்றாக்குறை ஏற்பட்ட 18 நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதனை  ஐ.நாவின் வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம் பாராட்டியுள்ளது.  

 ஜி-20 வேளாண் அமைச்சர்கள் மாநாட்டையொட்டி ஐ.நா.,வின் வேளாண் மேம்பாட்டு சர்வதேச நிதியத்தின் தலைவர் அல்வரோ லாரியோ இந்தியா வந்துள்ளார்.  அவர் தனியா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் ஜி-20 தலைமை, உணவு முறைகளை மாற்றியமைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. பயிர்சாகுபடி, அறுவடை, பதப்படுத்துதல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வது, சந்தைப்படுத்துதல், உணவு நுகர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய  உணவு அமைப்பு முறையானது கடந்த சில ஆண்டுகளாக பலவீனமாகியுள்ளது.  

கொரோனா தொற்றுப்பரவல்,  ரஷ்யா-உக்ரைன் போர் , காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள்  உலக உணவு பாதுகாப்பை பெருமளவு பாதித்துள்ளன. இதனால், ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகளவில் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர உக்ரைன் போர் வழிவகை செய்தது. இதனால், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உக்ரைன் போரினால்,  கடந்தாண்டு உணவு பற்றாக்குறையை எதிர்கொண்ட 18 நாடுகளுக்கு இந்தியா 18 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இது பாராட்டுக்குரிய செயலாகும்.   தெற்குலக நாடுகளின் ஒத்துழைப்பில், தமது சிந்தனைமிக்க தலைமையை இந்தியா வெளிப்படுத்தி வருகிறது.  

இவ்வாறு அவர் பேசினார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்