Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லண்டனில் ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி அஞ்சலி.. இப்படி ஒரு உத்தரவா?

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 11:10 [IST]
லண்டனில் ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி அஞ்சலி.. இப்படி ஒரு உத்தரவா?Representative Image.

இங்கிலாந்து நாட்டின் நீண்ட நாள் (70 ஆண்டுகள்) ராணியாக பொறுப்பு வகித்த இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் பொறுப்பேற்றார். அவரது மனைவி கமிலா ராணியாக பொறுப்பேற்றார். 

இந்நிலையில், எலிசபெத்தின் உடல் நேற்று ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது. அடுத்த சில நாட்கள் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும் எனவும், இதில் பல லட்ச கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும், ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இறுதிச் சடங்கில் பல உலகத் தலைவர்கள், ஐரோப்பிய அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் எனப் பலர் கலந்துகொள்கிறார்கள். மேலும், இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக வரும் 17-ம் தேதி லண்டன் செல்கிறார்.

இந்நிலையில், மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும்  செப்டம் 19 ஆம் தேதி அன்று வேறு யாருக்கும் இறுதிச் சடங்கு செய்ய கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், பலரும் இந்த உத்தரவிக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்த நிலையில், எலிசபெத் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் பிரத்யேகமாக எந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து இறுதிச் சடங்கு இயக்குநர்களின் தேசிய சங்கம் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்